Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இவரு கொஞ்ச நாளா வேலைக்கு வரல…. கண்டித்த கூலி தொழிலாளி…. காத்திருந்த அதிர்ச்சி….!!

கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார்திருநகரி பகுதியில் இசக்கி பாண்டி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சின்னதுரை மற்றும் மாரியப்பன் போன்றோருடன் இணைந்து கூலி வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சின்னத்துரையும் மாரியப்பனும் இணைந்து இசக்கி பாண்டியின் மனைவியிடம் இசக்கி பாண்டி கடந்த சில நாட்களாக வேலைக்கு வராமல் இருக்கின்றார் என தெரிவித்துள்ளனர்.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த இசக்கி பாண்டி தனது அண்ணன் இசக்கி என்பவருடன் இணைந்து மாரியப்பனையும் சின்னதுரையையும் கண்டித்துள்ளனர். அப்போது கோபத்தில் சின்னதுரை மற்றும் மாரியப்பன் இணைந்து அரிவாளால் இசக்கி பாண்டி தலையில் வெட்டியதோடு அவரது அண்ணன் இசக்கிக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

அதன்பின் அருகிலிருந்தவர்கள் இசக்கி பாண்டியை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆழ்வார்திருநகரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மாரியப்பன் மற்றும் சின்னதுரையை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |