Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் – அறநிலையத்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக தனித்துறை ஒன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கோயில் பராமரிப்பு, கோயில் சொத்துகளைப் பாதுகாத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தல் ஆகியவையும் இந்து சமய அறநிலையத் துறையின் கடமை ஆகும்.

இந்நிலையில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்ற அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டுள்ளார். கோயில் நிலங்கள், கட்டடங்கள், விவரங்கள், கோயில் நிர்வாக அலுவலர்கள், திருப்பணிகள் விழா போன்ற தகவல்களை மக்கள் பார்வையிடும் வகையில் இணையதளத்தில் வெளியிடவேண்டும் என்றும், கோயில் சொத்து ஆக்கிரமிப்புகளை அகற்றினால் வாடகை வசூலித்தலை விரைந்து செயல்படுத்துமாறும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |