கார் வாங்கித் தருவதாக கூறி தம்பதியினர் இரண்டு லட்ச ரூபாயை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழதேவதானம் மாதா கோவில் சந்தைப் பகுதியில் அருள் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் புதூர் பகுதியில் வசிக்கும் கீதா என்பவரும் அவரது கணவன் முருகானந்தம் என்பவரும் கார் வாங்கி தருவதாக கூறி அருள் முருகனிடம் இரண்டு லட்ச ரூபாய் பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் கூறியபடி அருள் முருகனுக்கு காரை வாங்கி கொடுக்கவில்லை.
இதனை அடுத்து அருள்முருகன் தான் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு கீதா, முருகானந்தமிடம் கேட்டுள்ளார். ஆனால் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் கீதாவும் முருகானந்தமும் இணைந்து அருள் முருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அருள்முருகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகானந்தம் மற்றும் கீதாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.