Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திடீரென பெய்த கனமழை…. பலமாக வீசிய சூறைக்காற்று…. கோரிக்கை விடுத்த விவசாயிகள்….!!

காற்றுடன் பெய்த கனமழை காரணமாக கோடைகால பயிர்கள் நாசமாகி விட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரபிக்கடலில் உருவான புயல் காரணமாக கன மழை பெய்துள்ளது. இதனால் வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி உள்ளது. ஆனால் அங்கு வீசிய பலத்த காற்றில் பல மின்கம்பிகள் அறுந்து மின்தடை ஏற்பட்டு உள்ளது. மேலும் முதுமலை, புதூர், கயல் பாடந்தோரை, கம்மாத்தி, புளியம்பாரா போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் முறிந்து முற்றிலும் சேதம் அடைந்து விட்டது.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது “இந்த கோடை காலத்தில் வறட்சியைத் தாங்கக்கூடிய மிளகாய், பாகற்காய், மாங்காய் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பெய்த கனமழை காரணமாக அனைத்து கோடைகால பயிர்களும் நாசமாகி விட்டது. எனவே மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு அதிகாரிகள் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |