Categories
மாநில செய்திகள்

“யாரும் நம்பாதீங்க” மருத்துவமனையில் கேப்டன்…. தேமுதிக வெளியிட்ட அறிக்கை…!!!

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்திற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அதிகாலை 3 மணி அளவில் நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் . அவருக்கு மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தேமுதிக சார்பாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், “தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக மட்டுமே சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது கேப்டன் உடல் நிலை சீராக இருக்கிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் கேப்டன் வீடு திரும்புவார். எனவே பொய்யான தகவலை யாரும் நம்பவேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |