புதுக்கோட்டை மாவட்டத்தில் நெஞ்சு வலியால் சுயேச்சை வேட்பாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விருதன்வயல் கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வந்தார். இவர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முத்தரையர் சங்கம் சார்பில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். இந்நிலையில் செல்வத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுக்குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.