Categories
தேனி மாவட்ட செய்திகள்

டவ்தே புயலினால் பெய்த கனமழை…. வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு…. பொதுமக்கள் மகிழ்ச்சி….!!

தேனியில் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால், அதனுடைய நீரின்மட்டம் 64 அடியாக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் 71 அடி உயரத்தைக் கொண்ட வைகை அணை அமைந்துள்ளது. இந்த அணையிலிருந்து ஆண்டிப்பட்டி, தேனி, மதுரை, சேடப்பட்டி பெரியகுளம் போன்ற பகுதிகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக வினாடிக்கு 72 கன அடி அளவிலான தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்நிலையில் டவ்தே புயலின் காரணத்தால் முல்லைப் பெரியாறினுடைய நீர்பிடிப்பு பகுதிகளிலும், போடியிலிருக்கும் கொட்டக்குடி ஆற்றினுடைய நீர் படிப்பிற்கான பகுதிகளிலும் மழை பொழிவு ஏற்பட்டது.

இதனால் கடந்த 2 தினங்களாகவே வைகை அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 64 அடியாக உயர்ந்துள்ளது. இவ்வாறு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருந்தால் மேலும் நீரின் மட்டம் உயர்வதற்கு வாய்ப்புள்ளது.

Categories

Tech |