புதுக்கோட்டை மாவட்டத்தில் இடத்தகராறில் பெண்ணை வெட்டிய குடும்பத்தை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ராப்பூசல் பட்டையார் களம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ருக்மணி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவருக்கும் ஆறுமுகத்திற்கும் இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. அந்த இடம் பிரச்சினையால் ருக்மணி முட்களை வெட்டி இடத்தில் போட்டுள்ளார். அதனால் இரு குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் ராமசாமி அங்கிருந்த வேலிக்கு தீ வைத்துள்ளனர்.
இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அதில் ராமசாமி அவரது மனைவி லெட்சுமி மற்றும் மகள் மோனிஷா ஆகிய 3 பேரும் சேர்ந்து ருக்மணியை மண்வெட்டியால் தலையில் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ருக்மணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். இதுக்குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ராமசாமி, லெட்சுமி மற்றும் மகள் மோனிஷா 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.