அமெரிக்காவில் ஒருவருக்கு நீதிமன்றத்தில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டதால் அவர் தன்னை தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள நார்த் டகோட்டா என்ற பகுதியில் வசித்து வந்த ஒரு நபர் பலரையும் பின் தொடர்ந்து அவர்களை தொல்லை செய்ததாக கொடுக்கப்பட்ட வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அந்த நபரை குற்றவாளியாகக் கருதி தீர்ப்பு அளித்துள்ளார். இதையடுத்து அந்த நீதிபதி நீதிமன்றத்திலிருந்து வெளியே சென்று விட்டார்.
இந்நிலையில் குற்றவாளியாக கருதப்பட்ட அந்த நபர் திடீரென எழுந்து மக்களும், நீதிமன்றத்தில் ஊழியர்களும் இருக்கும் போது அவர்கள் முன்னிலையில் கூர்மையான பேனா போன்ற ஒரு பொருளால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை கொண்டுள்ளார். அதனைக் கண்ட மக்கள் பதற ஆரம்பித்தனர். இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.