Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவுடன் நேரடியாக மோதும் நடிகர் சிவகார்திகேயன்…!!!

நடிகர் சூர்யாவின் ‘சூரரை போற்று’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்படம் இவ்வருட கிறிஸ்துமஸ் தினத்தன்று திரைக்கு வரவுள்ளது.

சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ படம் செப்டம்பர் மாதம் 20-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தற்போது சூர்யா ‘இறுதிச்சுற்று’ சுதா இயக்கும் ‘சூரரை போற்று’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் சென்னையில் நடந்துவரும் நிலையில் ‘சூரரை போற்று’ படத்தினை இவ்வருட இறுதியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

Image result for sivakarthikeyan vs surya

அதே தினத்தன்று சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘ஹீரோ’ படமும் ரிலீஸ் ஆகவுள்ளது. ‘இரும்புத்திரை’ மித்ரன் இயக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்துவருகிறார். சூர்யா-சிவகார்த்திகேயன் இருவரும் ஒரே நாளில் மோதவுள்ளதால் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |