Categories
மாநில செய்திகள்

குடும்பக் கட்டுப்பாடு போல், கொரோனா தடுப்பூசி திட்டம்…. இயக்குனர் சீனு ராமசாமி….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்தே கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதனையடுத்து நாளை முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து நாம் அனைவரும் தப்பிக்க ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை எப்படி சன்மானம் தந்து  வெற்றிகரமாக அன்றைக்கு நிறைவேற்றினார்களோ அதனைப் போலவே கொரோனா தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு நிறைவேற்றி சகல மக்களும் தடுப்பூசி மீது ஆர்வம் கொள்ளச் செய்தல் வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இயக்குனர் சீனு ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |