ஜெர்மனியில் இனரீதியாக தன் நாட்டவர் ஒருவர் மிக மோசமாக தாக்கப்பட்டத்தற்காக துருக்கி கடும் கண்டனத்தை முன்வைத்துள்ளது.
ஜெர்மனியில் கடந்த 16-ம் தேதி பிராங்க்பர்ட்டில் துருக்கி நாட்டவர் ஒருவர் காவல்துறையினரால் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளார். இதனால் துருக்கியின் ஆளும் கட்சி செய்தி தொடர்பாளர் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அது ஒரு இன ரீதியான தாக்குதல் என்றும் விமர்சனம் செய்துள்ளார். AKP கட்சியின் செய்தி தொடர்பாளரான ஒமர் செலீக் அந்தத் தாக்குதலில் சட்ட ஒழுங்கு பிரச்சினை எதுவும் இல்லை. அது ஒரு இன ரீதியான பாசிஸ தாக்குதல் என்று கூறியதோடு, அந்த தாக்குதல் சம்பந்தப்பட்ட வீடியோவை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
பிராங்க்பர்ட்டில் மன நலம் பாதிக்கப்பட்டிருந்த செலிம் சிபிட்சி என்னும் துருக்கி நாட்டவர் காவல்துறையினரின் மோசமான தாக்குதலால் செலிம்-ன் சிறுநீரகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவருடைய சகோதரி தெரிவித்துள்ளார். மேலும் துருக்கி தகவல்தொடர்பு இயக்குனரான பாஹரேட்டின் அல்துன் இந்த மோசமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அந்த வீடியோ அனைவரையும் பதற வைப்பதோடு, ஐரோப்பாவில் வெளிநாட்டவர் மீதான வெறுப்புகளை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.