முன்னணி நடிகர் அஜித்தின் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்சினிமாவில் வெளியாகி ஹிட்டடித்த பல படங்கள் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் வெளியான ‘வீரம்’ திரைப்படத்தை ரீமேக் செய்ய இருக்கின்றனர். ஹிந்தியில் ரீமேக்காகும் வீரம் திரைப்படத்தில் அஜித் கதாபாத்திரத்தில் நடிக்க அக்ஷய்குமார் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
ஆனால் அவர் இப்படத்தில் இருந்து விலகியதால் அதன் பிறகு இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சல்மான்கான் ஒப்பந்தமானார். தமிழில் வீரம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஹிந்தியில் “பை ஈத் கபி தீவாளி” என்று பெயரிடப்பட்டுள்ளது.
பிரபல நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் நடைபெற உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆகவே அஜித் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுவதால் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.