புதுக்கோட்டை மாவட்டத்தில் துணை மின் நிலையத்திற்கான உயர் மின்னழுத்த கோபுர மின் பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கல்லாக்கோட்டை கிராமத்தில் துணை மின் நிலையத்திற்கான உயர் மின்னழுத்த கோபுர மின் பாதை அமைக்கும் பணி நடைபெறுகின்றது. இதனால் அந்த மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறுகின்ற பகுதிகளில் மின் வினியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் வெள்ளாளவிடுதி, கந்தம்பட்டி, மங்களா கோவில், ஆத்தியடிப்பட்டி, கல்லாக்கோட்டை, அண்டனூர், கொல்லம்பட்டி, ராசாபட்டி மற்றும் கண்ணுகுடிப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் ராஜ் குமார் தெரிவித்துள்ளார்.