டெல்லி மாநிலத்தில் நூறு ரூபாய் கடனை திருப்பி கொடுக்காததால் தம்பதிகள் சேர்ந்து ஒருவரை குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மாநிலத்தை சேர்ந்த அஜித் என்பவர் ஜிதேந்தர் என்பவரிடம் நூறு ரூபாயை கடனாக பெற்றுள்ளார். இதையடுத்து ஜிதேந்தர் அஜித்திடம் சென்று 100 ரூபாய் கடனை திருப்பிக் கொடுக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு அஜித் அவரை அடித்தது மட்டுமல்லாமல் பணம் கொடுக்கவும் மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஜிதேந்தர் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்துள்ளார். அவருடன் மனைவியையும் அழைத்து வந்துள்ளார்.
பின்னர் இருவரும் சேர்ந்து அஜித்தை கத்தியால் தாக்கி அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர். அஜித்தை முழங்காலுக்குக் கீழ் கடுமையாக தாக்கியதால், அதிக அளவு ரத்தப் போக்கு ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதன்பின் ஜிதேந்தர் மனைவியை போலீசார் கைது செய்தனர். ஜிதேந்தர் தலைமறைவாகி உள்ளதால் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.