தொழிற்சாலையின் கேட் சரிந்து விழுந்து இன்ஜினீயர் மற்றும் காவல் அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம் பகுதியில் நற்குணம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலையில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நற்குணம் மாலை நேரத்தில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து நற்குணம் 15 அடி உயரமும், 20 அடி நீளமும் உடைய நுழைவுவாயில் கேட்டை மூடுவதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு ரயில்வே காவல் அதிகாரி இலக்குமணன் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் திடீரென அந்த கேட்டின் அடிப்பகுதி சக்கரத்தின் அச்சு முறிந்து விட்டதால் பிரமாண்டமான கேட் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரயில்வே காவல் அதிகாரி இலக்குமணன் மற்றும் இன்ஜினியர் நற்குணம் மீது விழுந்து விட்டது. இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இருவரையும் மீட்டு ஐ.சி.எப் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு இருவரையும் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.