தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அம்மாபட்டினம் பகுதியிலிருக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. அந்த முகாமை சிங்கவனம் வட்டார மருத்துவத்துறை, அம்மாபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஊராட்சி மன்றம் இணைந்து நடத்தியுள்ளனர்.
அதில் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர். மேலும் அம்மாபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர்களும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.