Categories
உலக செய்திகள்

“திடீர் விபத்து” வெடித்து சிதறிய பெட்ரோல் பங்க்… 15 பேர் படுகாயம்..!!

கம்போடியாவில் திடீரென பெட்ரோல் நிலையம் வெடித்து சிதறியதில் 15 பேர் படுகாயம்  அடைந்துள்ளனர். 

கம்போடியாவில் பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 2 ஆசிரியைகள் படுகாயமடைந்துள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த எல்க்ட்ரோ அமெரிக்காவை சேர்ந்த அபிக்ஷேல் ஆகியோர் கம்போடியாவில்  சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தனர். இருவரும் அங்கிருந்த பெட்ரோல் நிலையத்தில் தங்களது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தனர்.

Image result for petrol bunk blast

அப்போது திடீரென பெட்ரோல் நிலையம் வெடித்து சிதறியது. இந்த வெடிவிபத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர். மேலும்  பெட்ரோல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த 13பேரும் இந்த கோர விபத்தில் படுகாயம் அடைந்துள்ளனர். அங்கு வைக்கப்பட்டிருந்த 1658 லிட்டர் பெட்ரோல் நொடிப்பொழுதில் ஆவியானது. இதோடு பெட்ரோல் பங்க் வெடித்து சிதறும் காட்சிகளும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |