அரபிக்கடலில் உருவான டவ் தே புயல் குஜராத்தின் போர்பந்தர் – மாகுவா இடையே நேற்று அதிகாலை கரையை கடந்தது. அப்போது 185 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. கன மழையும் கொட்டி தீர்த்தது. அதனால் பல வீடுகள் சேதம் அடைந்து மின் கம்பங்கள் மற்றும் ஏராளமான மரங்கள் சாய்ந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அவற்றை சரிசெய்யும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் வங்கக்கடலில் 23ஆம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.