Categories
தேசிய செய்திகள்

மே 21ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடக்கம்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் கடந்த 2 மாதத்திற்கு மேலாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் மக்களுக்கு அவ்வப்போது சற்று குளிர்ச்சியை ஊட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதன்படி மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் தென்தமிழக மாவட்டங்களிலும் சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தென்மேற்கு பருவமழை, தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் 21ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 21 ஆம் தேதியிலிருந்து மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |