புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டுக்குள் பாம்பு புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். அவர் வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாம்பை இடுக்கி மூலம் பிடித்து சாக்கில் அடைத்துள்ளனர். இதனையடுத்து அந்த பாம்பை வனத்துறை அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.