நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு தினங்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஏற்கனவே 22 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் மே-30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டிப்பதாகவும், மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காகவும், காய்கறி, மளிகை கடை திறக்கவும் அனுமதி உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.