Categories
கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில்…. இங்கிலாந்து வீரர்கள் அறிவிப்பு ….’ஐபில் வீரர்கள் இடம்பெறவில்லை’…!!!

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள ,15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு  நியூசிலாந்து அணி , 2  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  விளையாடுகிறது. இதில் முதல் போட்டி வருகின்ற ஜூன் 2 ம் தேதி நடைபெற உள்ளது. ஜோரூட் தலைமையில் அமைந்துள்ள 15 பேரைக் கொண்ட இங்கிலாந்து அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் புதுமுக வீரர்கள்  வேகப்பந்து வீச்சாளரான ஓலி ராபின்சன் மற்றும் விக்கெட் கீப்பரான  ஜேம்ஸ், பிரேசி, ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இதற்கு முன்பு ,இந்தியா மற்றும் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்தனர். ஆனால் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் யாரும் இந்த தொடரில் பங்கேற்கவில்லை. குறிப்பாக காயம்  காரணமாக அணியின் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளரான  ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் இடம்பெறவில்லை. அத்துடன் தற்போது நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்டு நாடு திரும்பிய வீரர்களான சாம் கர்ரன்,மொய்ன் அலி, ஜோஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ் மற்றும் பேர்ஸ்டோவ் ஆகிய வீரர்கள்  இந்த தொடரில் இடம்பெறவில்லை.

Categories

Tech |