Categories
தேசிய செய்திகள்

இனி மே-31 வரை…. காலை 10 மணி முதல் 1 மணி வரை…. அதிரடி அறிவிப்பு…!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இதனால் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கடுமையான கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் மக்களின் பொருளாதார நலனை கருத்தில் கொண்டு வங்கிகள் மட்டும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால் வாடிக்கையாளர்கள் நகைக்கடன் உள்ளிட்ட முக்கியமான தேவைகளுக்கு மட்டும் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 31-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே வங்கிகள் இயங்கும் என்று அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் முக்கியமான பணிகள் இருந்தால் மட்டுமே வங்கிகளுக்கு  செல்லவும் என்று வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி எஸ்பிஐ தனது வங்கிக் கிளைகளில் நேரத்தை மாற்றியுள்ளது.

Categories

Tech |