Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே….முதல்முறையா இப்படி நடக்குது …. பிசிசிஐ -யின் மாஸ்டர் பிளான் …!!!

இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே இரு அணிகள் , ஒரே விமானத்தில் இங்கிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது உள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு ,விராட் கோலி தலைமையில் அமைந்த  இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. கிட்டத்தட்ட மூன்றரை மாதம் இங்கிலாந்தில் விளையாட இருப்பதால் வீரர்களின் குடும்பத்தினரையும் உடன் அழைத்துச் செல்வதற்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. இந்த போட்டிகளில்   இந்திய அணியில் இடம்பெற்ற 20 வீரர்கள் மற்றும் மாற்று வீரர்கள் 4 பேர் அனைவரும் ,இன்று முதல் மும்பையில் தனிமைப் படுத்தப்பட உள்ளன. 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, வீரர்கள் இங்கிலாந்திற்கு புறப்படுகின்றனர்.

இந்நிலையில் இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதனால் ஆண்கள் அணியை போலவே, மகளிர் அணியும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருப்பதால்,பிசிசிஐ இரு அணிகளையும் ஒரே விமானத்தில் பயணிப்பதற்கு முடிவுசெய்துள்ளது . எனவே  இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இரு அணிகளும் ஒரே விமானத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்நிலையில் மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீரர்,வீராங்கனைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் ,இங்கிலாந்து செல்வதற்கு முன்பாக 3 முறை கொரோனா பரிசோதனை செய்யப்படும்.அந்த பரிசோதனை முடிவில் ‘நெகட்டிவ்’ வந்தால் மட்டும் அவர்கள் இங்கிலாந்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்,என்று பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது .

Categories

Tech |