Categories
மாநில செய்திகள்

மருத்துவமனையில் கூடுதல் கட்டணம்… தமிழக அரசு எச்சரிக்கை…!!!

மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகின்றது. நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் மக்கள் பலர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், ஒரு சிலர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி நிரம்பி விட்ட காரணத்தினால், பலர் தனியார் மருத்துவமனைகளை நாடி செல்கின்றனர். அவர்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டாலும், அதிக அளவு கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும், மருந்துகளுக்கு கூடுதல் கட்டணங்கள் கேட்பதாகவும் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பது, மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்பது மற்றும் அரசின் இலவச சேவைகளுக்கு பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவது போன்ற மனிதநேயமற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

Categories

Tech |