Categories
மாநில செய்திகள்

இன்று முதல் 4 நாட்களுக்கு மின்சாரம் இருக்காது… வெளியான தகவல்…!!

இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சுற்றியுள்ள சில கிராமங்களில் மின்சாரம் இருக்காது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கல்லாக்கோட்டை கிராமத்தில் துணை மின் நிலையத்திற்கான உயர் மின்னழுத்த கோபுர மின்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள சில கிராமங்களில் 4 நாட்களுக்கு ஒரு மணி முதல் 4 மணி வரை மின்சாரம் தடைபட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமங்கள்:

வெள்ளாளவிடுதி, கந்தம்பட்டி, மங்களா கோவில், ஆத்தியடி பட்டி, கல்லாக்கோட்டை, அண்டனூர், கொல்லம் பட்டி, ராசா பட்டி மற்றும் கண்ணுகுடி பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மதியம் ஒரு மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |