விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராஹீம் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சாத்தூர் கிருஷ்ணன் கோவில் அருகே மதுபாட்டிலை விற்ற போஸ் பாண்டியன்(52) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 28 மது பாட்டிலை கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தம்பித்துரை தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது நடுச்சூரங்குடியில் வீட்டின் அருகில் வைத்து மது விற்பனை செய்த சுபாஷ்சுந்தர் (23) என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 7 பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.