இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் பகுதி நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதனால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகள் மட்டும் காலை 10 மணி முதல் 2 மணிவரை செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. இருந்தாலும் சில முக்கியமான தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வங்கிக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் வங்கிகளில் மக்களின் கூட்டம் அதிக அளவு அலைமோதுகிறது. அதனால் கொரோனா அதிகம் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 31-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணிவரை மட்டுமே வங்கிகள் செயல்படும் என அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் முக்கியமான பணிகள் இருந்தால் மட்டுமே வங்கிக் கிளைக்கு செல்லவும் என வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி எஸ்பிஐ இனி தனது வங்கிக் கிளைகளின் நேரத்தை மாற்றியுள்ளது.