பிரிட்டனில் பேராசிரியர் ஒருவர், மாணவியிடம் மோசமாக நடந்து கொண்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டு 2 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு, தங்கள் மாணவர்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆனால் “வேலியே பயிரை மேய்ந்தாற்போல்” சில ஆசிரியர்கள் மாணவிகளிடம் மோசமாக நடந்து கொள்ளும் சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
அந்த வகையில் தமிழரான கெரி தனபாலன் என்பவர், மாணவி ஒருவரிடம் தவறாக நடந்த சம்பவம் அரேங்கேறியுள்ளது. இவர் பிரிட்டனில் உள்ள சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். இந்நிலையில் வேறு பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் வேல்ஸில் உள்ள ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது தனபாலன் அந்த மாணவியை பின் தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் அவர் மது போதையில் இருந்துள்ளார். அந்த மாணவி தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியும் தொடர்ந்து மாணவிக்கு முத்தம் கொடுத்து மோசமாக நடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி ஓடியுள்ளார்.
அவரை பின் தொடர்ந்து ஓடிய தனபாலன், “உன் வீட்டிற்கு வருகிறேன், நாம் அங்கு சந்தோசமாக இருப்போம்” என்று மோசமாக பேசியுள்ளார். எனவே அந்த மாணவி தன் நண்பருக்கு தொடர்பு கொண்டு உடனடியாக வரவழைத்தவுடன், தனபாலன் மீண்டும் மாணவிக்கு முத்தம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
இதுகுறித்து காவல் துறையினரிடம் தெரிவிக்கப்பட்ட புகாரின் பேரில், உடனடியாக அவரை கைது செய்திருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து தனபாலன் பணிநீக்கம் செய்யப்பட்டதுடன், இரண்டு வருடங்கள் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.