சுவையான உருளைக்கிழங்கு வறுவல் செய்யலாம் வாங்க ….
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 1/2 கிலோ
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
அரிசி மாவு – 2 தேக்கரண்டி
சோள மாவு – 2 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் அரிசி மாவு , சோளமாவு, மிளகாய்தூள் , சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பிசறி எண்ணெயில் போட்டு வறுத்தெடுத்தால் சுவையான உருளைக்கிழங்கு வறுவல் தயார் !!!