Categories
தேசிய செய்திகள்

“EARTH TO MOON ” ட்ராக் மாறிய சந்திராயன்-2… மென்மேலும் சாதனை..!!

சந்திராயன்-2 விண்கலமானாது நிலவின் வட்டப்பாதையை சுற்ற தொடங்கி விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியமான கட்டத்தை எட்டி இருக்கிறது.

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை சுமார் ரூ 978 கோடி ரூபாய் செலவில் வடிவமைத்தது. ஜூலை 22 ஆம் தேதி மதியம்  2.43 மணி அளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

 

Image result for santhirayan 2

இதையடுத்து புவி வட்டப்பாதையில் சுற்றி வந்த  சந்திராயன்-2 அவ்வவ்போது புவியின் புகைப்படங்களை எடுத்து அனுப்பி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்நிலையில் புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திராயன்-2 நிலவின் வட்டப்பாதையை சுற்றத் தொடங்கியது. முன்னதாகவே காலை 9.30 மணிக்கு நிலவின் வட்டப்பாதையை சந்திராயன்-2 அடையும் என்று கூறிய நிலையில் தற்போது நிலவின் வட்டப்பாதையை சுற்ற தொடங்கி முக்கியமான கட்டத்தை எட்டி இருக்கிறது. 

Categories

Tech |