தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் அழுகியதால் இழப்பீடு வழங்க வேண்டி விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் அங்கு 80 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ள நெற்பயிர்களானது தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்துள்ளது . ஆனால் அப்பகுதியில் கடந்த 3 நாட்களாக சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து உள்ளது .
இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள குண்டாறு, குற்றாலம் ஐந்தருவி, பழைய குற்றால அருவிகள் என அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்தினால் நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி விட்டது. இதனால் விவசாயிகள் நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் மிகுந்த மன வேதனையுடன் தவித்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் தங்களது நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி அழுகி விட்டதால் அதிக நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக மன வேதனையுடன் தெரிவித்துள்ளனர். எனவே அழுகிய நெற்பயிர்களுக்கான உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.