Categories
சினிமா தமிழ் சினிமா

இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பாலோவர்கள்… மகிழ்ச்சியில் குக் வித் கோமாளி ரித்திகா…!!!

குக் வித் கோமாளி பிரபலம் ரித்திகா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார் .

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டவர் ரித்திகா. இந்த நிகழ்ச்சியில் ரித்திகாவும் கோமாளி பாலாவும் சேர்ந்து செய்த கியூட்டான ரகளைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் இருந்து ரித்திகா  சில வாரங்களிலேயே வெளியேற்றப்பட்டார். மேலும் இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் ராஜா ராணி-2 சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

https://twitter.com/tamilrithika/status/1394649803829641218

தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் செம ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரித்திகா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘இப்போது ஒரு மில்லியன் பெரிய குடும்பம். என் மீது அன்பையும் ஆதரவையும் பொழிந்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி’ என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |