Categories
சினிமா தமிழ் சினிமா

ஏ.ஆர்.ரஹ்மானின் ’99 சாங்ஸ்’… ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?… வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

ஏ.ஆர். ரஹ்மானின் ’99 சாங்ஸ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர். ரஹ்மான் முதல் முதலாக கதை எழுதி தயாரித்து இசையமைத்த படம் ’99 சாங்ஸ்’ . கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ரிலீஸானது. இந்த படத்தில் இஹான் பட் கதாநாயகனாகவும் எடில்சி வர்கஸ் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். 99 சாங்ஸ் படம் வெளியாவதற்கு முன்பே இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் இன்று இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என நேற்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 99 சாங்ஸ் திரைப்படம் வருகிற மே 21-ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |