Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடைக்கப்பட்ட வீதிகள்… வழங்கப்பட்ட உணவு பார்சல்கள்… தீவிரப்படுத்தப்படும் சுகாதார பணிகள்…!!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு உணவு பார்சல்கள் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அதிகாரிகள் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும்  இடங்களை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள விஜயபுரத்தில் 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தடுப்புகள் வைத்து அங்குள்ள நான்கு வீதிகளையும் அதிகாரிகள் அடைத்து விட்டனர். இதனை அடுத்து தாசில்தார் அரசகுமார் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி 120 குடும்பங்களுக்கு தேவையான சாம்பார் சாதம், பிரியாணி போன்ற உணவுப் பார்சல்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்துள்ளனர்.

Categories

Tech |