தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் கொரோனா வார் ரூமுக்கு நள்ளிரவில் சென்று ஆய்வு நடத்தி மக்களின் குறைகளை கேட்டறிந்து, உடனே அதற்கான ஏற்பாடுகளை செய்தார். இந்நிலையில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள விரும்பிய ஸ்டாலின் அதன் முதற்கட்டமாக செங்கல்பட்டு கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.
இந்நிலையில் அவர் திமுக தொடர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், “நாளை செல்ல இருப்பது பொதுமக்களை பாதுகாக்கும் பணிகள் தொடர்பான ஆய்வு என்பதால், கழக நிர்வாகிகள் எவரையும் சந்திக்க இயலாத சூழலில் இருக்கிறேன். எனக்கு வரவேற்புக் கொடுக்கும் எண்ணத்தில் கொடிகள் கட்டுவதையும், பதாகைகள் வைப்பதையும் தவிர்க்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.