இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மலேசியா டூ அம்னீஷியா பட டிரைலரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் வாணி போஜன், வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மலேசியா டூ அம்னீஷியா. இந்த படத்தில் கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு பிரபல நடிகர் பிரேம்ஜி இசையமைத்துள்ளார் . இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
My bad…. Didn't know how I missed it.. https://t.co/lkY7GN1KaJ
— Raja yuvan (@thisisysr) May 18, 2021
நேற்று மலேசியா டூ அம்னேஷிய பட டிரைலரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா இந்த படம் வருகிற மே 28-ஆம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகும் என அறிவித்து படக்குழுவினர் அனைவரையும் டேக் செய்திருந்தார். இந்நிலையில் நடிகர் பிரேம்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தலைவா இது என்னோட மியூசிக் ஆனால் நீங்க என்னை டேக் செய்யவே இல்லை’ என பதிவிட்டுள்ளார். இதற்கு யுவன் சங்கர் ராஜா ‘என் கெட்டது… நான் இதை எப்படி தவறவிட்டேன் என தெரியவில்லை’ என்று பதிலளித்துள்ளார். இவர்களது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.