Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: ‘இந்த அணிதான் ஜெயிக்க போறாங்க’….! மைக்கல் வாகனின் கணிப்பு …!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ,நியூசிலாந்து அணி வெல்வதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக மைக்கல் வாகன் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில்  வருகின்ற ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரை நடைபெறும் , உலக டெஸ்ட்  சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன. எனவே இந்த தொடரில் வெற்றியை யார் கைப்பற்றுவார் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து மைக்கல் வாகன் கூறும்போது, இந்தத் தொடரில் நியூசிலாந்து அணி கண்டிப்பாக வெற்றியை கைப்பற்றும் என்று கூறியுள்ளார். ஏனெனில் நியூசிலாந்து அணி இங்கிலாந்தின் கண்டிஷனுக்கு ஏற்பவும், டியூக் பால் மற்றும் போட்டியின் சூழல் ஆகியவை நியூசிலாந்துக்கு ஏற்றவாறு உள்ளது.

ஆனால் இந்திய அணி போட்டி  தொடங்குவதற்கு, ஒரு வாரத்திற்கு முன்பு தான் இங்கிலாந்திற்கு வருகின்றனர். அத்துடன் இந்தப் போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து அணி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. எனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ,நியூசிலாந்து அணி விளையாடும் போது, சிறந்த பயிற்சி போட்டியாக அமையும். அதோடு இந்திய அணி 24 நாட்கள் குவாரண்டின் இருப்பதால் மீண்டும் பயிற்சி எடுத்துக்கொண்டு போட்டியில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்துவது கடினம் தான். எனவே எல்லா வழிகளிலும் நியூசிலாந்து அணிக்கு தான் சாதகமாக அமைந்துள்ளதால் ,இந்த தொடரை நியூசிலாந்து அணி வெல்லும் ,என்று மைக்கல்  வாகன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |