Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் ‘வலிமை’… சூப்பர் அப்டேட் சொன்ன பிரபல நடிகர்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் அஜித்தின் வலிமை படத்தின் அப்டேட்டை பிரபல நடிகர் ஆர்.கே. சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, ராஜ் ஐயப்பா, சுமித்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மே 1-ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

THALA GEETHAM will be the Opening Song" - RK Suresh Reveals! | Ajith | US  70 - YouTube

இந்நிலையில் வலிமை படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை பிரபல நடிகர் ஆர்.கே. சுரேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வலிமை படத்தில் சில அவுட் ஸ்டாண்டிங் ஸ்டன்ட் காட்சிகளில் நடிகர் அஜித் நடித்துள்ளதாகவும் அவரது கேரியரில் வலிமை படம் முக்கியமான படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் இந்த படம் ரசிகர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு கொண்டுவரும் ஒரு படமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Categories

Tech |