காலை 10 மணி வரை மார்க்கெட் பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பொது மக்கள் கூட்டமாக குவிந்தனர்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இதனால் மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே திறந்து வைத்து விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் ஊட்டி பகுதிகளில் அமைந்துள்ள திறந்தவெளி மார்க்கெட்டுகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் குவிந்தனர். ஆனால் அங்கு குவிந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்துள்ளனர். இவ்வாறு காலை 10 மணி வரை பரபரப்பாக இருந்த மார்க்கெட் மற்றும் சாலை பகுதிகள் 10 மணிக்கு பிறகு பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.