கணவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதை நினைத்து மன உளைச்சலில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கும்பகாரபேட்டை பகுதியில் குருராஜ் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு சாவித்திரி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குருராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதனையடுத்து தனது கணவர் தொற்றினால் பாதிக்கப்பட்டதை நினைத்து மன உளைச்சலில் இருந்த சாவித்திரி வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஓசூர் டவுன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த ஓசூர் டவுன் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.