Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான கொத்த மல்லி சாதம் செய்வது எப்படி …

சுவையான கொத்த மல்லி சாதம் செய்வது எப்படி …

தேவையான பொருட்கள்:

கொத்த மல்லி    – 1 கட்டு

வேகவைத்து வடித்த சாதம் -1 கப்

பச்சை மிளகாய் –  3

வெங்காயம்-  1

பூண்டு        – 2 பற்கள்

இஞ்சி         – 1 சிறிய துண்டு

கடுகு           -1/4  தே.கரண்டி

சீரகம்          – 1/4  தே.கரண்டி

கடலை பருப்பு- 1/4 தே.கரண்டி

உளுந்து        – 1/4  தே.கரண்டி

ந.எண்ணெய்-  தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் கொத்தமல்லி இலை , பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு  மற்றும்  சிறிது  தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள  வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுந்து , கடலை பருப்பு  , வெங்காயம் சேர்த்து  வதக்கி , கொத்தமல்லி கலவை  மற்றும் வேக வைத்த சாதத்தினை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கொத்த மல்லி சாதம் தயார் !!!

Categories

Tech |