Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடையை திறக்க வந்த உரிமையாளர்…. காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

கடையின் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் 17 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மலைகோட்டை பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பல்பொருள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ரமேஷ் காலை 6 மணிக்கு கடையை திறக்க சென்ற போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 17,000 ரூபாய் பணம் மற்றும் சில பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக மலைகோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் கடந்த 14ஆம் தேதி மற்றொரு கடையில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 5 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றுள்ளனர். இவ்வாறு அடிக்கடி திருட்டு நடைபெறுவதால் வியாபாரிகள் இடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |