புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயமூர்த்தி (62) மாரடைப்பால் காலமானார். அவர் தனது வீட்டில் நேற்று மயங்கி விழுந்து கிடந்தார். அதனால் அவரது குடும்பத்தினர் அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து அவர் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது மறைவை அறிந்த அனைத்து அரசியல் கட்சியினரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Categories