தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை இந்த வருடத்தின் தொடக்கத்தில் பரவத் தொடங்கியது. அப்போதிலிருந்தே நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் கொரோணா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியமான ஒன்று தடுப்பூசி போடும் பணி. முதல் கட்டமாக முன்களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக 9 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் சென்னையில் கொரோனா பாதுகாப்பு மையங்களில் 4300 படுக்கைகள் காலியாக உள்ளதாகவும், தேவைப்படுவோர் அதை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.