Categories
ஆன்மிகம்

திருமணத் தடை நீங்கும்…. குழந்தை வரம் கிட்டும்…. தோரணமலை அற்புதங்கள்…!!!

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள ஊர்தான் இந்த தோரணமலை. இந்த ஊரில்தான் மலை மீது தோரணமலை முருகன் கோவில் கொண்டுள்ளான். தேரையர் சித்தர் ஜீவசமாதி அடைந்த இடமே இந்த மலை. இந்த மலையில்தான் பல ஆண்டுகளுக்கு முன்பு அகத்தியர் சித்த வைத்திய சாலை வைத்துள்ளார். அகத்தியரின் சிஷ்யர்களில் பலர் இங்குதான் வைத்தியம் கற்றுக்கொண்டனர். தேரையரும் அகத்தியரின் சீடரே ஆவார். ஒரு காலத்தில் மன்னன் ஒருவனின் தலைகுள் தேரை தவளை குஞ்சி ஒன்று இருந்து பாடாய் படுத்தியது.

தேரையர் சித்தர் அவனுக்கு இங்குதான் கபால அறுவை சிகிச்சை செய்தார். மண்டை ஒட்டை கலட்டி எடுத்ததும், தேரை தென்பட்டது. அதை எவ்வாறு மூளைக்கு பாதிப்பு இல்லாமல் எடுக்க என எல்லோரும் சிந்தித்தபோது. தேரையர் ஒரு பானையில் தண்ணீரை கொண்டு வந்து மன்னனின் தலை அருகே வைத்தார். தேரை அதுவாக பானையில் குதித்தது. பின்பு திறந்த கபாலத்தை மூலிகைகள் கொண்டு அடத்தார். இதனால்தான் இவர் தேரையர் என பெயர் பெற்றார். உலகிலேயே முதல்முதலில் கபால அறுவை சிகிச்சை நடந்த இடம் தோரணமலைதான்.

நோய் நொடிகள் அனைத்தையும் இந்த முருகனை காண மலை மீது ஏறும் போதே மூலிகை காற்றுகள் குணமாக்கிவிடும். பின்பு முருகன் நோய் எதிர்ப்பு ஆற்றலையும், தைரியத்தையும் தருவான். திருமணம், குழந்தை, கல்வி, தொழில், உடல் நலம் போன்ற அனைத்திலும் சிறப்பை இந்த கந்தன் தருவான். மலை மீது பல சுனைகள் உண்டு. இவற்றில் குழித்தால் பாவங்கள் நீங்கும். மன தெழிவு கிட்டும். மலை மீது பத்திரகாளியம்மன் கோவிலும், ஸ்ரீ இராமரின் பாதமும் இங்கே உண்டு.

இராவணனை அழிக்க இராமருக்கு அகத்தியர் பிரம்மா அஸ்திரத்தை இங்குதான் தந்து அனுப்புகிறார். மேலும் இந்த மலை மிது விசும் தென்றல் காற்று மிக பெரும் ஆழ்ந்த அமைதியை தரும். இந்த மலையில் இன்னொரு முக்கியமான அதிசயம் என்னவென்றால், அம்மாவாசை, பௌர்ணமி மற்றும் முக்கியமான ஆன்மீக நாட்களில் இங்கு சித்தர்கள் பூசை செய்ய உளாவுவார்கள் என்று பல பக்தர்கள் கூறுகிறார்கள். ஏனென்றால் இந்த நாட்களில் இரவு நேரங்களில் இங்கே மணி அடிக்கும் சத்தம் கேட்குமாம்.

அது எங்கிருந்து வருகிறது என்று எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அரூபமாக சித்தர்கள்தான் பூசை நடத்துகிறார்கள் இந்த நாட்களில் என அனைவரும் நம்புகின்றனர். இன்னும் இந்த தோரணமலையில் அகத்தியர் வழிபட்ட லிங்கமும் உண்டு. நாகப் புற்றும் உண்டு. இங்கே மறணமில்லா பெருவாழ்வு தரும் மூலிகைகளும் மறைந்து உள்ளதாக கூறுவர். இப்படி தோண்டத்தோண்டப் பல அதிசயங்கள் நிறைந்த மலைதான் இந்தத் தோரணமலை.

Categories

Tech |