Categories
மாநில செய்திகள் வேலூர்

அடடே! இந்த ஊர்ல ஒருத்தருக்கு கூட…. கொரோனா தொற்று இல்லையாம்…. காரணம் என்ன தெரியுமா…??

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், 3 கிராமங்களில் மட்டும் யாருக்கும் கொரோனா தொற்று இல்லையாம். ஆம் வேலூர் மாவட்டத்திலுள்ள ஜார்தான் கொல்லை, பீஞ்சமந்தை , பாலாம்பட்டு ஆகிய 3 மலைக்கிராமங்கள் தான். இந்த மலை கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் திருவண்ணாமலை விடுதியில் தங்கி படித்து வந்தபோது  அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு பின்பு குணமடைந்துள்ளார். இதையடுத்து அந்த மூன்று மலைக்கிராமங்களில் உள்ள அனைவருக்குமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அதில் ஒருவருக்கு கூட கொரோனா பாசிட்டிவ் இல்லையாம். இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறுகையில், “அங்கு வாழும் மக்கள் இயற்கையான காற்றை சுவாசிக்கிறார்கள். செயற்கை உரங்கள் அல்லாத உணவை சாப்பிடுகிறார்கள். மேலும் தற்போது தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்த கிராம மக்கள் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே காய்கறி வாங்க ஒடுக்கத்தூர் பகுதிக்கு செல்கின்றனர். தேவையின்றி யாரும் மலையை விட்டுக் கீழே வருவதே இல்லை. எனவே தான் இந்த மலை கிராமங்களில் உள்ள மக்களில் ஒருவருக்குக்கூட கொரோனா தொற்று இல்லை” என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |