மத்திய அரசின் சிறந்த பென்ஷன் திட்டங்களில் இதுவும் முக்கியமான ஒரு திட்டம். அது என்ன என்பதை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
பிரதான் மந்திரி வந்தனா பென்ஷன் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் பென்ஷனாக கிடைக்கும். நீங்கள் இதில் சேமித்து வைத்தால் இறுதிகாலத்தில் நீங்கள் யார் தயவையும் எதிர்பார்க்காமல் பென்சனை வைத்து நிம்மதியாக வாழலாம். வந்தனா யோஜனா திட்டத்தில் சிறப்பு சலுகைகள் பல உள்ளது. இந்த திட்டம் ஃபிக்ஸட் டெபாசிட், பென்ஷன் திட்டங்களை விட மிகச் சிறந்தது. கொரோனா என்பதை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தின் வட்டி விகிதம் 8% இருந்து 7.4 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனாலும் வருடாந்திர அடிப்படையில் 7.66 சதவீதம் வட்டி லாபம் கிடைக்கின்றது. இது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மிகவும் சிறந்த திட்டம். இந்த திட்டத்தில் 15 லட்சம் வரையில் நீங்கள் சேமிக்கலாம். அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். 3 ஆண்டுகள் நிறைவு செய்த பிறகு கடன் வசதி கிடைக்கும்.
இந்த திட்டத்தில் பயன் பெறும் வாடிக்கையாளர்கள் மாதாந்திர ஓய்வூதியதிற்கு குறைந்தபட்சம் 1.62 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். வருடத்திற்கு 1.61 லட்சமும், ஆறு மாதங்களுக்கு 1.59 லட்சமும், ஆண்டு ஓய்வூதியத்திற்கு குறைந்தபட்சம் 1.56 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். 2021 ஆம் ஆண்டு நீங்கள் 15 லட்சம் முதலீடு செய்தால் 2031 ஆம் ஆண்டு 7 சதவீத வருமானத்தை பெறலாம். 10 வருடத்துக்கு பிறகு ஒவ்வொரு மாதமும் நீங்கள் பென்சின் பெற்று வாழ முடியும்.
இத்திட்டத்தின் கீழ் அதிகபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9,250 ஆகும். காலாண்டு ஓய்வூதியம் ரூ.27,750, அரையாண்டு ஓய்வூதியம் ரூ.55,500 மற்றும் அதிகபட்ச ஆண்டு ஓய்வூதியம் ரூ.1,11,000. மாதாந்திர பென்சனுக்கு 7.40%, காலாண்டு பென்சனுக்கு 7.45%, அரையாண்டு பென்சனுக்கு 7.52% மற்றும் வருடாந்திர பென்சனுக்கு 7.60% வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது