Categories
இந்திய சினிமா சினிமா

பிக் பாஸ் வீட்டிற்கு சீல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!

பிரபல பிக் பாஸ் வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

மலையாளத் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் மோகன்லால் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த இந்நிகழ்ச்சியின் டெக்னீஷியன்கள் ஆறு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமை படுத்தபட்டதாக தகவல் வெளியானது.

தற்போது கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வருகின்ற 31ம் தேதி வரை எந்த ஒரு படபிடிப்பும் நடக்காது என்று பெப்சி தொழிலாளர் சங்க தலைவர் ஆர்கே செல்வமணி அறிவித்திருந்தார். ஆனால் விதிமுறைகளை மீறி மலையாள பிக்பாஸ் படப்பிடிப்பு நடந்ததால் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பிக்பாஸ் படப்பிடிப்பு செட்டிற்க்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதன்பின் மாவட்ட கலெக்டர் ஆலோசனை பேரில் விதிமுறைகளை பின்பற்றாத மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, அந்த செட்டிற்கு சீல் வைக்கப்பட்டது. இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த பிரபலங்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.இச்சம்பவம் அப்பகுதியில் சிலநேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |